in

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிப்பு

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கெங்கபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக அப்பகுதி சேர்ந்தவர்கள் சிலர்  மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் வட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு  ஏற்படாத நிலையில் தன்னுடைய நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக தற்கொலை கடிதம் எழுதி வைத்துக் கொண்டு கையில் இருந்த பெட்ரோலை  உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மோகன்ராஜ் அவசர ஊர்தியின் மூலம் வளர்த்தி போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

What do you think?

திருப்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வது குறித்து, ‘யுனெஸ்கோ’ குழுவினர் ஆய்வு