நடுவானில் விமானக் கழிவறையில் இளைஞர் விபரீத முடிவு
நடுவானில் விமானக் கழிவறையில் இளைஞர் தற்கொலை முயற்சி
சமீபகாலமாக விமானப் பயணங்களில் சர்ச்சைகளும், புகார்களும் அதிகரித்து வருகின்றனர். இதனால் விமானப் பயணிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். அந்த வகையில் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து லண்டன் நகர் நோக்கி பி.ஆர்.67 என்ற எண் கொண்ட தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் கழிவறைக்கு சென்று உட்புறம் கதவை பூட்டி கொண்டார். உள்ளே சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவே இல்லை.
இதனால் விமான ஊழியர்கள், பணிப்பெண்கள் சந்தேகம் அடைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததும் அந்த பயணி மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார். உடனடியாக விமான ஊழியர்கள் அதே விமானத்தில் பயணம் செய்த மருத்துவரின் உதவியை நாடினர். உடனடியாக விமானத்தில் இருந்த மருத்துவர் சேர்ந்து அந்த பயணிக்கு முதலுதவி செய்தனர்.
அதன்பின் அவசர நடவடிக்கையாக, அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்பாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு சென்றது. இது குறித்து அந்த பயணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி குறிப்பிட்ட அந்த நபர் கழிவறையில் தற்கொலைக்கு முயற்சித்தார் எனத் தெரிய வந்துள்ளது. அந்த பயணி பின்னர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவருடைய அடையாளம் உட்பட எந்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் விமானத்தில் சற்று நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.