in

நாகை கடலில் ஆர்வமுடன் டைவடித்து ஆட்டம் போட்டுக் குளிக்கும் இளைஞர்கள்


Watch – YouTube Click

நாகை கடலில் ஆர்வமுடன் டைவடித்து ஆட்டம் போட்டுக் குளிக்கும் இளைஞர்கள்

 

நாகையில் மீண்டும் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் கொடுமையால் நாகை கடலில் ஆர்வமுடன் டைவடித்து ஆட்டம் போட்டுக் குளிக்கும் இளைஞர்கள்.

நாகை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு மழையும் குளிர்ந்த சீதோசன நிலை நிலவியதால் நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள் தற்போது மீண்டும் சுட்டெரிக்கும் கடும் வெயிலினால் கவலை அடைந்துள்ளனர்.

காலை தொடங்கிய வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர தயக்கம் காட்டுகின்றனர்.

பணி நிமித்தமாக வெளியில் செல்வோர்கள் எந்த நேரமும் தங்களது தலையில் தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்து கொண்டும் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகை கடலில் டைவடித்து குதித்து ஆட்டம் போட்டு குளித்து இளைஞர்கள் ஆர்வமுடன் விளையாடுகின்றனர்.

வெயிலின் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் கடலில் இறங்கி விளையாடுவது ஆனந்தமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் கடலோர காவல்துறையினர் கடற்கரைப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.


Watch – YouTube Click

What do you think?

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த பள்ளிவாசல் இடிக்கும் பனி தொடங்கப்பட்டது

வீராணம் ஏரியின் தண்ணீர் பச்சை நிறமாக காணப்படுவதால் அதிர்ச்சி