121 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி சாலை பணிகள்-எட்டு கோடி 23 லட்சத்தில் புதிய கூடுதல் சுற்றுலா மாளிகை உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அடுத்த மெய்யூர் பகுதியில் 121 கோடி ரூபாய் மதிப்பில் 58 கிலோ மீட்டர் தூரம் கொண்ட திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி 2 வழி சாலை, நான்கு வழிச்சாலையாக முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பங்கேற்று திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி இடையே அமைய உள்ள நான்கு வழி சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.
மேலும் சுமார் 8 கோடி 23 லட்சம் மதிப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கட்டப்பட்ட 15 நவீன அறைகள் கொண்ட கூடுதல் சுற்றுலா மாளிகை வளாகத்தினை இன்று திறந்து வைத்தார்.
மேலும் திருவண்ணாமலை பாடிய மருத்துவமனை அருகே பொதுமக்களை பயன்பாட்டுக்காக புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடைகளையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டடம் ஆகிய அதிகாரிகள் பங்கேற்றனர்.