in

அதிமுக கொடி சின்னத்தை தொண்டர்கள் பயன்படுத்த தடை ஏதும் இல்லை


Watch – YouTube Click

அதிமுக கொடி சின்னத்தை தொண்டர்கள் பயன்படுத்த தடை ஏதும் இல்லை

அதிமுக கொடி சின்னத்தை நான் தான் பயன்படுத்தக் கூடாது என்று தான் தீர்ப்பு உள்ளது. தொண்டர்கள் பயன்படுத்த தடை ஏதும் இல்லை. சிவகங்கையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி.

சிவகங்கையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் சிவகங்கையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் சார்பில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்திற்கு புரட்சி காவலர் என்ற பட்டத்தை வழங்கி, வீரவாள் மற்றும் வளரி உள்ளிட்டவை நினைவு பரிசாக வழங்கினார்கள். பின்னர் செய்தியாளர் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதனை சில விதிகளின்படி அமைத்துக் கொள்ளலாம் என புரட்சித்தலைவி சொல்லி இருக்கின்றார் என்றும், அதிமுக கொடி சின்னத்தை நான் தான் பயன்படுத்தக் கூடாது என்று தான் தீர்ப்பு உள்ளது. தொண்டர்கள் பயன்படுத்த தடை ஏதும் இல்லை என்றார்.

மேலும், எந்த தேர்தல் வந்தாலும் அண்ணா திமுகவில் எங்களது அணி இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க்கும் என்றவர்,நான்கரை ஆண்டு காலம் பல தவறுகள் செய்தாலும், பாஜகவின் ஆதரவில் தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது. பாஜக கூட்டணி முறிவு எடப்பாடியின் உச்சபட்ச துரோகம் என்று சாடிய ஓபிஎஸ்,
அமமுக பிரிந்து போட்டியிட்டதால் சட்டமன்றத்தில் அதிமுக தோல்வியை தழுவியது. ஆனாலும் எடப்பாடி திருந்தவில்லை. தற்போது மேலும் பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராகி கட்சியை ஐந்தாக உடைத்திருக்கிறார். ஆதலால் தொண்டர்களை இணைக்கும் முயற்சியினை நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். அதில் வெற்றியும் பெறுவோம் எனவும், எடப்பாடி இல்லாத அண்ணா திமுக மலரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம் என்பது மனிதாபிமான முறையில், எந்த மக்களுக்கும் தீங்கு ஏற்படாத வகையில், மக்களுக்கு உரிய சட்டமாகவும், காலம் காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்க வழக்கங்களுக்கு மாசு ஏற்படாத வகையில் அமைய வேண்டும் என ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்ததாக போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள்

அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு வங்கியில் ரூ 4 50 கோடி கையாடல்