அமரன் டைட்டில்..லை அமர்க்களமாக வெளியிட்ட sk21 படக்குழு… அமரன் …ஒரு உண்மை சம்பவம்
ரசிகர்கள் எஸ் கே 21 படத்திற்கு பல டைட்டில்களை டிக் செய்தபோதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவகார்த்திகேயனின் எஸ் கே 21 படத்திற்கு ‘அமரன்’ என்ற டைட்டிலை வெளியிட்டனர் படக்குழுவினர்.
எஸ் கே எஸ் 21 டைட்டில் டீசர் நேற்று மாலை வெளியானது, அப்படத்திற்கு அமரன் என்ற டைட்டிலை அமர்க்களமாக பட குழு நேற்று வெளியிட்டது, சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார்.
ராணுவ வீரராக நடிப்பதற்கு Fitness தேவை என்று தான் ஒர்க் அவுட் எல்லாம் செய்து வீடியோவை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.
முகுந்த் வரதராஜன் யார் அவர் என்ன சாதனை செய்தார் என்று அவர் ஹிஸ்டரியை எடுத்து பார்க்கும் பொழுது அவரைப் பற்றிய அறியாத பல விஷயங்கள் தெரியவந்துள்ளது, SK 21 படத்தின் கதை இவரை பற்றியதுதான்.
சென்னையில் உள்ள தாம்பரத்தில் 1983 ஆம் ஆண்டு முகுந்த் பிறந்தார் அவரது அப்பா விமானப்படையில் சேர ஆசைப்பட்டார். ஆனால் வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் அவரது பெற்றோர்கள் அவரை அப்பணியில் சேர அனுமதிக்கவில்லை அதனால் தனது ஒரே மகனான முகுந்த் ஆர்மியில் சேர விருப்பம் தெரிவித்த போது அவரது பெற்றோர்கள் நோ சொல்லவில்லை.
ராணுவத்தில் சேர்ந்த பத்தாண்டுகளில் மேஜராக புரமோட்டான முகுந்தன் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மரணம் அடைந்தார், சைனிக் பள்ளியில் படிப்பை முடித்த முகுந்தன் அதன்பின் கல்லூரி படிப்பை தொடர்ந்தார். பிறகு கால் சென்டரில் சில மாதங்கள் வேலை செய்த போது தனது மகன் ராணுவ கனவை தகர்த்து விட்டார் என்று நினைத்த அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ராணுவத்தில் தேர்ச்சி பெற்று 2004 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.
அவரது விடாமுயற்சி விரைவிலேயே அவரை மேஜர் அளவிற்கு உயர்த்தியது ராஜ்புத் ரெஜிமெண்ட் என்னும் ராணுவத்தில் மேஜராக செயல்பட்டு வந்த முகுந்தன் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சண்டை போட்ட பொழுது வீர மரணம் அடைந்தார். அவர் இறந்த பிறகு அசோக சக்கர விருது வழங்கி அவரை கௌரவிக்கப்பட்டது.
ஏப்ரல் 12ஆம் தேதி முகுந்தனின் பிறந்த நாள் அன்று அவர் அப்பா அவருக்கு ஹாப்பி பர்த்டே என்று மெசேஜ் அனுப்பிய போது பத்து நாட்களில் வீடு திரும்பி வந்து விடுவேன் மனைவிடம் இதைப் பற்றி கூறாதீர்கள் என சொல்லி இருந்தார்.
முகுந்தன் ஆனால் உயிரிழந்த நிலையில் தான் அவர் வீடு வந்து சேர்ந்தார், ரெபேக்கா வர்கீஸ் என்பவரை திருமணம் செய்த முகுந்தனுக்கு பெண் குழந்தை ஒன்று உண்டு அவர்களுடன் வெறும் ஆறு மாதம் காலங்கள் மட்டுமே கழித்தார். தான் குடும்பம் பற்றி நினைக்காமல் தன் கவனம் முழுவதும் இந்தியாவை நோக்கி தான் இருந்ததாக முகுந்தனை பற்றி ஒரு முறை அவர் தந்தை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அப்படிப்பட்ட ராணுவ வீரரின் வீர கதையை எஸ் கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் நிச்சயம் இந்த படம் வெளிவந்த பிறகு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கனத்த இதயத்துடன் தான் தியேட்டரை விட்டு வெளியே வருவார்கள்.