மத்திய அமைச்சரை அவன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியில் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் விற்பனை நிலையத்தை திருச்சியில் இன்று மேலபுலிவார் ரோடு பகுதியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பல்வேறு மாநில புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு அதனை குறைந்தபட்ச 100 இடங்களிலாவது ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற புத்தகங்கள் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையை தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடமாக திருச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் இந்த புத்தக விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 இடங்களில் இதனை தொடங்குவதற்கு தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் என்பதை தாண்டி திமுககாரன் என்ற வகையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்,
அதே நேரம் ‘பிரதமரின் ஸ்ரீ’ பள்ளிகளுக்கான கையெழுத்து இடுவதற்கு ஒரு குழு அமைத்து இருக்கிறோம். அதற்காக நாங்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் அர்த்தமாகாது.
நமக்கு தரவேண்டிய மூன்றாவது தவணை நான்காவது தவணை 1800 கோடி மட்டுமல்ல, தமிழகத்திற்கு அவன் தர வேண்டிய 3500 கோடியையும் லிங்க் செய்ய வேண்டும் என்பதற்காகவே கையெழுத்திட்டு இருப்பதாக, தமிழக முதல்வர் கூறுவதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் அதனால் தான் மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்தி வருகிறோம், கல்வியை தேசியப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என தனது விருப்பத்தையும் மத்திய அமைச்சரிடம் தெரிவித்ததாகவும், புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது அமைச்சர் தெரிவித்தார்.
பேட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய கல்வித்துறை அமைச்சரை அவன் என ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.