ஏ ஐ தொழில் நுட்பத்தின் முலம் மீண்டும் விஜயகாந்த் நடிக்கிறார்
ஏ ஐ நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தற்பொழுது பெரும் புரட்சியை ஏற்படுத்துகின்றனர்.
சமிபத்தில் வெளியான லால் சலாம் படத்தில் கூட திமிரி ஏழுடா” பாடலில் மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோரின் குரல்களை மீண்டும் உருவாக்க ரஹ்மான் AI ஐப் பயன்படுத்தினார்.
அந்த குரல்கள் நம் காதை விட்டு இன்னும் நீங்கவில்லை மறுபுறம் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளின் புகைப்படங்களை தவறாக இணையத்தில் கசியவிடுகின்றனர்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களை படத்தில் நடிக்க வைக்க புது முயற்சிகள் நடக்கின்றது சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இணைந்து நடித்த தமிழன் என்று சொல் படம் தயாரானது.
இதனை டைரக்டர் பொன்சங்கர் டைரக்ட் செய்தபோது படபிடிப்பில் விஜயகாந்த் சில நாட்கள் பங்கேற்ற நிலையில் உடல்நல குறைவால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை அந்த படம் அப்படியே கைவிடப்பட்டது.
தற்பொழுது விஜயகாந்தின் நினைவாக தமிழன் என்ற சொல் படத்தை ஏன் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்த்தை மீண்டும் நடிக்க வைக்க கூடாது என்று பட குழுவினர் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.