புதுச்சேரி…கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா. முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
புதுச்சேரி கதிர்காமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் செடல் விழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 1ந் தேதி செடல் விழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது.
இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் இன்று நடந்தது. இதையொட்டி கதிர்காமம் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்..
அதே போல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது துணைவியாருடன் அலகு குத்தி கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.. அதேபோல் வேண்டுதல் நிறைவேறக்கோரி பொதுமக்கள் செடல் குத்திக்கொண்டனர்.
செடல் உற்சவத்தையொட்டி கதிர்காமம், இந்திராநகர் உட்பட சுற்றுப்பற பகுதிகளை சேர்ந்த 37 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் வழுதாவூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது…