காங்கிரசை கழட்டி விட்ட மம்தா
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆரம்பத்தில் இருந்தே தயக்கம் காட்டி வந்தார். அடிக்கடி தனித்து போட்டியிடப்போவfsu football jersey fsu football jersey OSU Jerseys Ohio State Team Jersey asu football jersey fsu football jersey Iowa State Football Uniforms asu football jersey custom made football jerseys custom football jerseys College Football Jerseys asu football jersey OSU Jerseys 49ers jersey brock bowers jersey தாக மம்தா பானர்ஜி சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும் இந்தியா கூட்டணியில் இருந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் சொற்ப தொகுதிகளை கொடுக்க தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். அதோடு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி இரு கட்சிகளிடையே கூட்டணிக்கு தடையாக இருப்பதாக மம்தா பானர்ஜியும் அவரது கட்சியினரும் அடிக்கடி கூறிக்கொண்டிருந்தனர். சொன்னபடி திடீரென மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் தனது கட்சி சார்பாக போட்டியிடும் 42 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து இருக்கிறார்.
இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பெஹ்ராம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். இத்தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது. அதோடு மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி இத்தொகுதி எம்.பி.யாகவும் இருக்கிறார். கொல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். மஹூவா மொய்த்ரா கிருஷ்ணா நகர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யூசுப் பதான் வேட்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து அதிர் ரஞ்சன் செளத்ரி அளித்த பேட்டியில்,”யூசுப் பதானை கெளரவிக்க வேண்டும் என்று திரிணாமுல் விரும்பினால் அவரை ராஜ்ய சபாவுக்கு அனுப்பி இருக்கவேண்டும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு நியமிக்கப்படுகிறார்கள். மம்தா பானர்ஜிக்கு உண்மையில் நல்ல எண்ணம் இருந்தால் இந்தியா கூட்டணி சார்பாக யூசுப் பதானுக்கு குஜராத்தில் ஒரு சீட் வாங்கிக்கொடுத்திருக்கவேண்டும். தொடர்ந்து இந்தியா கூட்டணியில் இருந்தால் பிரதமர் வருத்தப்படுவார் என்று மம்தா பானர்ஜி அச்சம் அடைந்துள்ளார். எனவேதான் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி என் மீது அதிருப்தி கொள்ளவேண்டாம் என்று பிரதமர் அலுவலகத்திற்கு செய்தி அனுப்பி இருக்கிறார் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மரியாதைக்குரிய தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக பலமுறை அறிவித்து வருகிறது. அத்தகைய ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமான அறிவிப்புகளால் அல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதி செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது” என்றுகூறினார். காங்கிரஸ் கட்சி இன்னும் மேற்கு வங்கத்திற்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.