ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட வந்தனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராOhio State Team Jersey College Football Jerseys detroit lions jersey Ohio State Team Jersey Ohio State Team Jersey Florida state seminars jerseys College Football Jerseys custom made football jerseys OSU Jerseys 49ers jersey OSU Jerseys Ohio State Team Jersey asu football jersey Florida state seminars jerseys detroit lions jersey ஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள ஊரணிப்பட்டி தெருவில் 100 குடும்பங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் நித்தியா விஜயகுமார் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் தெருவிளக்கு, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை பிரச்சனைகளும் இது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து கடந்த மாதம் பொது மக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பேச்சு வார்த்தை நடத்திய காவல் துறையினர், இன்றும் 15 தினங்களுக்குள் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொது மக்கள் போராட்டத்தை கை விட்டனர்.
ஆனால் உறுதி அளித்தபடி இன்று வரை குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப் படவில்லை எனக் குற்றம் சாட்டி, இன்று காலை காலிக் குடங்களுடன் அப் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் முடங்கியாறு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பொது மக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குடிநீர் கோரி பொது மக்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் சமரசம் செய்தனர்.
குடிநீரை லாரி மூலம் 400 ரூபாய்க்கு விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாக குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர். ஊராட்சி தலைவரை சம்பவ இடத்திற்கு அழைத்த காவல் துறையினர், பொது மக்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இன்னும் இரு தினங்களில் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் அளித்த உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.