in

கும்பகோணம் ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர் திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்


Watch – YouTube Click

கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர் திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே அழகாபுத்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும், ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயத்தின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பணமோசடி செய்ததற்காக Paytm வங்கிக்கு ரூ 5 49 கோடி அபராதம்

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்