கேப்டன் விஜயகாந்த்தை போல இந்த நடிகரும் பல இயக்குனர்களை வாழ வைத்தவர்.
அடுத்தவர் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர்கள் எல்லாம் ஒலி எழுந்து மடிந்து போனதாக தான் சரித்திரம் கூறுகிறது அப்படி ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் விஜயகாந்த் போல இவரும் பலரை வாழ வைத்தவர்.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இருக்கும் பொழுது அவர் பெற்ற பெயரை விட அவர் மறைந்த பிறகு தான் அவர் செய்த பல நல்ல காரியங்கள் வெளிவர தொடங்கி இருக்கிறது.
சக நடிகர்களுக்கு உதவி செய்வதும் தன்னை வீடு தேடி வந்தவர்களுக்கு வயிறார சாப்பாடு போடுவார் நலிந்த பல கலைஞர்களுக்கு சினிமா துறையில் வாய்ப்பு வழங்கியவர், பல இயக்குனர்களை வாழ வைத்தவர் இப்படி அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் இவரை போல தான் மறைந்த நடிகர் முரளியும் பல இயக்குனர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறார்.
ஆனால் விஜயகாந்த் பற்றி அறிந்த அளவிற்கு முரளி பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
மணிரத்தினம், விக்ரமன், சேரன், கதிர் போன்ற பல இயக்குனர்களின் படங்களில் நடித்தவர், மறைந்த நடிகர் முரளியின் தந்தை கன்னட உலகின் பிரபல தயாரிப்பாளராக இருந்த போதிலும் நடிகர் முரளி தனது சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர்.
சேரன் இயக்கிய ‘வெற்றி கொடி கட்டு’ என்ற படம் உருவத்துக்கு காரணமே முரளிதானாம், சேரன் இயக்கிய தேசிய கீதம் படத்தால் பல பிரச்சினைகள் ஏற்பட்ட பொழுது ஒரு வருடத்திற்கு சேரன் எந்த படத்தையும் இயக்க வில்லையாம் அப்பொழுது சேரனின் நிலைமையை அறிந்த முரளி சேரனை அழைத்துக் கொண்டு சிவசக்தி பாண்டியனிடம் சென்றாராம். இவரின் நிலைமை எடுத்துக் கூறி வெற்றிக்கொடி கட்டு என்னும் படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கி கொடுத்தாராம்.
அந்த படத்தில் பார்த்திபன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சேரன் சொல்லி இருக்கிறார், இதுபற்றி பார்த்திபனுக்கு தெரிய வரவே அவரும் இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம், ஏற்கனவே சேரனின் படங்களில் வடிவேலுவின் காமெடி ஒர்க் அவுட் ஆக இந்த படத்திலும் வடிவேலுவை கமிட் செய்தாராம் சேரன் எப்பொழுதுமே சிங்கிள் ஹீரோவை வைத்து படம் இயக்கிய சேரன் முதன்முறையாக இரண்டு ஹீரோக்களை வைத்து படம் எடுத்து ஹிட் கொடுத்தார். வெற்றிக்கொடி கட்டு படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.