ஆம்புலன்ஸ் சைரனுக்கும் போலீஸ் சைரனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம்
ஜெயம் ரவி கதாநாயகனாகவும் , கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் திரைப்படம் சைரன் 108.
ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கிய இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
வரும் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது ஒரு ஆம்புலன்ஸ்க்கும் சைரனுக்கும் போலீஸ் சைரனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் இந்த கதை.
அனைவராலும் ஈர்க்கப்படும் கதாநாயகனாக ஜெயம் ரவி இப்படத்தில் புதிய கோணத்தில் நடித்திருக்கிறார். படம் பார்க்கும்பொழுது ரசிகர்களுக்கு அது புரியும் கீர்த்தி சுரேஷ் நடிப்பையும் சொல்லித்தான் ஆக வேண்டும் ஜெயம் ரவிக்கு இணையாக அவரால் நடிக்க முடியுமா என்று நினைத்த பொழுது ஐந்து கிலோ எடை கூட்டி ஜெயம் ரவிக்கு ஈக்குவலாக நடித்து அசத்திவிட்டார்.
அவர்தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்று சொல்லலாம், அதேபோல அனுபமா பரமேஸ்வரன் தோன்றும் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல்லாகவே இருக்கும் சமுத்திரகனி மற்றும் யோகி பாபு பற்றிய சொல்ல வேண்டாம் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் இசையில் நான்கு பாடல்களுமே அற்புதமாக அமைந்திருக்கிறது, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் படத்திற்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் குடும்பம், ஆக்சன் மற்றும் தில்லர் நிறைந்த படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன்.
ஜெயம் ரவி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் Teaser மற்றும் ட்ரைலர் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கண்டிப்பாக இந்த படம் தியேட்டரில் ரசிகர் முன் நின்று பேசும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் இயக்குனர்.