தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா
மக்களவைத் தேர்தலில் போட்டி
தெலுங்கானா ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக தலைவராக 2014 முதல் 2019ம் ஆண்டு வரை தமிழிசை பதவி வகித்தார். 2009 பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிட்டார்.
2006, 2011, 2016 தமிழக சட்டசபை தேர்தல்களிலும் தமிழிசை போட்டியிட்டுள்ளார்.
2006 தமிழக சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தற்போதைய சபாநாயர் அப்பாவுக்கு எதிராக தமிழிசை போட்டியிட்டார். 2019 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிட்டார். 2019ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி தெலுங்கானா கவர்னராக தமிழிசை பொறுப்பேற்றார்.
2021-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி முதல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் தமிழிசை கூடுதலாக கவனித்து வருகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, விருதுநகர், கன்னியாகுமரி, தென்சென்னை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தமிழிசை களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.