துணை நடிகரின் மனைவி கடத்தி சென்று மிரட்டல்..மகனின் நிலை என்ன என்று தெரியவில்லை
கடன் வாங்கியதால் துணை நடிகரின் மனைவி மற்றும் மகன் கடத்தி செல்லப்பட்டனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம் விஷ்வாஷ் நகரில் வசித்து பார்ப்பவர் துணை நடிகர் மதியழகன்.
இவருக்கு மாலதி என்கிற மனைவி மற்றும் நடராஜ் என்ற ஒரு மகன் உண்டு. ஏழ்மையின் காரணமாக மதியழகன் மனைவி உமாராணி என்பவரிடம் ஆறு லட்சம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார்.
வாங்கிய கடனை கொடுக்க இயலாததால் மாலதியையும் அவருடைய மகனையும் கடத்தி உமாராணி தனது வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதோடு வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வைத்தார்.
வேலை செய்த நேரம் போக தனியறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார். மேலும் மகன் நடராஜனையும் மாலதியுடன் தங்க வைக்காமல் வேறு ஒரு இடத்தில் அடைத்து வைத்தார்.
திடீரென்று மனைவியும் மகனும் காணாமல் போனதால் உறவினர் வீடுகள் அனைத்திற்கும் சென்று தேடிய இவர் சில நாட்களுக்கு முன்பு தான் உமாராணி இவர்களை கடத்திய விஷயம் தெரிய வர நீதிமன்றத்தில் பணிபுரியும் தன்னுடைய தம்பி சதீஷ் உதவியுடன் சில வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு உமாரானியின் வீட்டிற்குச் சென்றார்.
வீட்டிற்குள் யாரையும் சோதனை போட அனுமதிக்காததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது, போலீஸாரின் உதவியுடன் அடைத்து வைக்கப்பட்ட மாலதியை மீட்டனர்.
ஆனால் மகன் இருக்கும் இடம் தெரியாமல் போலீசார் தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர். உமாராணி திருச்சி பாஜக காந்தி மார்க்கெட் மண்டல துணைத் தலைவராக உள்ளார். இவர் கந்துவட்டி கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார்.
போலீசார் இடம் பிடிபட்ட மாலதி திடீரென்று அங்கிருந்து ஆட்டோவை பிடித்து தப்பி சென்று விட்டார். கந்த வட்டி வாங்கியதால் ஒரு பெண் இரண்டு மாதங்களாக மாலதியையும் அவர் மகனையும் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது, மகனின் நிலை என்ன என்று இன்னும் தெரியவில்லை.