நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலை அபகரிக்க முயல்வதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு குலதெய்வ கோயிலை அபகரிக்க முயல்வதாக கேள்விபட்டு ஊர் மக்கள் அவருக்கு எதிராக திரண்டு நிற்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிராமத்தில் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோவில்தான் வடிவேலுவின் குலதெய்வ கோவில் .
ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலுக்கு வடிவேலு சென்று வழிபடுவது வழக்கம் அதனால் கோயில் சம்பந்தமாக எடுக்கப்படும் அனைத்து முடிவுகளிலும் வடிவேலுவிடமும் கலந்து ஆலோசிப்பது ஊர் மக்கள் வழக்கம். இவரும் இந்த கோயிலிக்கு நிதி உதவிசெய்துள்ளார்.
இந்த கோயிலை வடிவேலுவுக்கு நெருக்கமான பாக்யராஜ் என்பவர் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயல்வதாகவும் ஊர் மக்களை கலந்து ஆலோசிக்காமல் அற காவலர் என்ற பொறுப்பை வடிவேலு உருவாக்கி அதற்கு பாக்யராஜை பொறுப்பாளராக நியமிக்க இருப்பதாகவும் ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது சம்பந்தமாக பாக்கியராஜ் கூறுகையில் இது சிலர் கிளப்பிவிட்ட புரளி ,மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் கோயில் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.