நாங்களும் அரசியல் காட்சி ஆரம்பிப்போம்..ஆம்…மா.. ஆனா எப்போ ஆரம்பிப்பேன் எனக்கே தெரியாது
விஷாலுக்கு அறிக்கை விடுவது அவரின் வாழ்க்கையிலன் அறக்கட்டளையாக கடைப்பிடித்து வருகிறார்.
விரைவில் விஷால் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது, என்னடா இன்னும் விஜய் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தவுடன் இவர் எதுவும் அறிக்கை விடவில்லையே என்று எதிர்பார்த்த நிலையில் நானும் மக்களுக்காக தான் பணி செய்கிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறியதாவது எனக்கு அந்தஸ்தும் அங்கீகாரமும் கொடுத்த தமிழக மக்களுக்கு எப்பொழுதுமே நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்று என் ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாக கருதாமல் மக்களுக்கு நன்மை செய்யும் மன்றமாகவே நான் அமைத்திருக்கிறேன்.
மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மக்களுக்கு பணி செய்வதும் என் தாயாரின் பெயரில் இயங்கும் தேவி அறக்கட்டளை மூலம் பல மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கு உதவி செய்து வருகிறேன்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்களுக்கு பணி செய்வதில்லை மக்களுக்கு பணி செய்வது என்னுடைய கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.
தொடர்ந்து நான் மக்களுக்காக பணியாற்றுவேன், கடைசியாக மக்களுக்கு ஒரு ட்விஸ்ட் வைத்து முடித்திருக்கிறார். அதாவது வரும் காலத்தில் இயற்கை ஏதாவது முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களில் ஒருவராக குரல் கொடுக்கவும் நான் தயங்க மாட்டேன் என்று விஜய்க்கு எதிராக களத்தில் இறங்குவேன் என்று இலை மறை காயாக பொருள் கொண்டு யாரும் அறியாமல் சொல்லி …விஜய்க்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.