நான் கடன் வாங்காத நாளும் இல்லை கடன் கேட்காத மனிதர்களும் இல்லை… ஆர் ஜே பாலாஜியின் கடந்த காலம்
ரேடியோவில் வேலை செய்த ஆர் ஜே பாலாஜி சினிமா துறையில் நாயகனாக நடித்து பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறார் மேலும் கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் பிரபல நாளிதழுக்கு தனது சினிமா அனுபவத்தை ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்து கொண்டார் நீங்கள் ரேடியோவில் பணிபுரிந்த போது சினிமா துறையை பயங்கரமாக கலாய்த்திருக்ககீறீர்களா? என்ற கேள்விக்கு ஆமாம் நான் பண்ண நிகழ்ச்சி ஒரு சினிமா விமர்சனம் அதனால் சினிமா பிரபலங்களை பற்றி விமர்சனம் செய்தேன் சிலருக்கு ஆத்திரம் வந்தாலும் சிலர் இவன் சொல்றது சரியா தான்டா இருக்குது என்றும் நினைத்தார்கள் நீங்கள் கதை எழுதும் போது உங்களை மையப்படுத்தி தான் கதை எழுதுவீர்களா என்ற கேள்விக்கு ஆமாம் எனக்கு டான்ஸ் ஆட வராது அதனால் அதற்கான அவசியம் இல்லாத படி தான் கதை எழுதுவேன் அரசியலைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள் தேர்தலில் நிற்பதும் அழகாக பிரச்சாரம் செய்வது மட்டுமே அரசியல் அல்ல தேவை இல்லாமல் ஒரு மரத்தை வெட்டும்போது தட்டி கேட்டால் அதுவும் அரசியல் தான்.
வரலாற்று படங்களில் உங்களுக்கு நடிக்க ஆசை இல்லையா என்ற கேள்விக்கு அந்த மாதிரி படங்களில் நடிக்க முதலில் என்னை கூப்பிடவே மாட்டார்கள் வரலாற்று படங்கள் என்றாலே ஆஜானுபாகுவான தோற்றம் தேவை நடிக்கும் போது என்னை பார்த்து நானே சிரித்துக் கொள்வேன் நான் குதிரையிலிருந்து இறங்கும்போது மன்னா என்று கூப்பிட்டால் என்னா என்று சிரிப்பாககேட்டு விடக்கூடாது . மேலும் அவர் கூறியதாவது நான் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது எனக்கு நிறைய கடன்கள் இருந்தது யாரைப் பார்த்தாலும் ஆளுக்கு தகுந்த மாதிரி கடன் கேட்டு இருக்கின்றேன் கடன் வாங்காமல் ஒருநாளும் கழிந்தது கிடையாது இப்பொழுது என் நிலைமையே மாறிவிட்டது கடன் கேட்பதும் கடன் கொடுப்பதும் இப்பொழுது எனக்கு பிடிக்காது யாராவது கடன் கேட்டால் காசு கொடுப்பேன் ஆனால் திருப்பி எப்போதுமே கேட்க மாட்டேன் ,எல்லோரையும் கலாய்க்கிறீர்களே அதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு நிறைய இருக்கிறது
சில டைரக்டர்கள் என்னிடம் சண்டையும் போட்டு இருக்கிறார்கள் அவர்களில் இருவரிடம் நான் நட்பாகி இரண்டு படங்களையும் நடித்து விட்டேன் ,இறுதியாக என் குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு மூன்று தங்கைகள் ஒரு தம்பி இருக்கிறார் தம்பி டாக்டருக்கு படிக்கிறார் ஒரு தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டது மூன்றாவது தங்கை இப்பொழுது சைக்காலஜி படிக்கிறார் பாட்ஷா படத்தில் ரஜினி மூன்று விளக்குகள் ஏற்றியது போல நான் ஏற்ற வேண்டிய விளக்குகள் இன்னும் நிறைய இருக்கிறது
நான் 22 வயதில் காதல் திருமணம் செய்த போது என் கடைசி தங்கச்சிக்கு நான்கு வயது அப்போதிலில்இருந்து குடும்ப பாரத்தை சுமக்கிறேன் கடவுள் அருளோடு கரையேறி விட்டேன் எதுவும் இல்லாத சூழ்நிலையில் என்னை கரம் பிடித்த என் மனைவி தான் என் வெற்றிக்கான ஒரே காரணம் .இவருக்கு ஒரு மகன் உண்டு. கடைசியாக எனக்கு கோபம் வருமா ஆனால் பசி எடுக்கும் போது மட்டும் தான் என்று ஜாலியாக சிரித்து பேட்டிக்கு என் கார்டு போட்டார்.