நெல்லையில் சிறப்பு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் தங்கம் தென்னரசு சபாநாயகர் அப்பாவு பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்
கலை பண்பாட்டு துறை சார்பில் கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் மொத்தம் 33,58 கோடி மதிப்பீட்டில் 1200 பயனாளிகளுக்கு சிறப்பு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் இதில்
26.33 கோடி மதிப்பில் நிறைவுற்ற கட்டட பணிகளைத் திறந்து வைத்து 3.16 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் மேலும் கலை பண்பாட்டு துறை சார்பில் நெல்லை மாவட்டத்தில் 2022-2023 மற்றும் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் சிறந்த 30 கலைஞர்களுக்கு கலை இளமணி,கலை வளர்மணி கலைச்சுடர்மனி, கலை நண்மணி கலைமுதுமணி விருதுகளையும் வழங்க அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் வழங்கினர்
இவ்விழாவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்
இந்த ஆட்சி அனைவருக்குமான ஆட்சி தமிழ்நாட்டில் வாழும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நதிட்ட உதவிகள் சென்று சேர வேண்டும் என்ற ஆசையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்
1200 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகளை 33.58 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை தற்போது வழங்குவதாகவும் அவர் பேசினார்
மேலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குடிசை இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 3000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஆதிதிராடர்கள் வாழும் பழைய வீடுகளை பழுது நீக்க 2000 கோடி மொத்தமாக 5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பேசினார்
தொடர்ந்து பேசிய அவர் இந்த நிதிநிலை அறிக்கையில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மாணவிகளுக்கு வழங்குவது போன்று மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் பேசினார்
மத வேறுபாடுகளை கடந்து இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது என்றும்
எல்லோருக்கும் எல்லாம் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்று வருகிறது என்றும் அவர் பேசினார்
உங்களுடைய துயரில் பங்குபெறும் முதலமைச்சர் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
ஒரு கஷ்டம் வரும்போது உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்கள் அண்ணனாக முதலமைச்சர் ஸ்டாலின் வந்து நிற்கிறார் என்று அவர் பேசினார்
பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில்
ஒரு வீடு கட்டுவதற்கு மத்திய அரசு ஒரு மடங்கு தருகிறது என்றால் தமிழ் நாடு அரசு நிதி நெருக்கடியிலும் இரண்டு மடங்கு நிதியை வழங்கின்றது என்றும்
தமிழ்நாடு அரசு தாய் உள்ளத்தோடு ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாகவும் அவர் பேசினார்
இந்தியாவில் வட்டியில்லாத பயிர் கடன் கொடுக்கும் திட்டத்தை தொடங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும் அது தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது தற்போதைய அரசு என்றும் உலகில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பான முதல்வர் மு க ஸ்டாலின் என்றும் அவர் பேசினார்
விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவ், நெல்லை மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், எம் எல் ஏ அப்துல் வகாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 33 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் நெல்லை பொருநை அருங்காட்சியக பணிகளையும் மின்சாரம் நிதி மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.