இன்று நடைபெற்ற கண்டதேவி தேர் வெள்ளோட்ட பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடந்து முடிந்தது .
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் 2006-ம் ஆண்டுக்கு பின்னர், கும்பாபிஷேகம், மற்றும் புதிய தேர் செய்வது போன்ற காரணங்களால் நடக்காமல் இருந்தது. அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேர் செய்யப்பட்டது.
ஆனால் வெள்ளோட்டம் நடக்காமல் இருந்தது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு துவங்கி 7.35. மணிக்கு தேர் வெள்ளோட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது தேரை இந்து சமய அறநிலையத்துறை, தேவஸ்தான ஊழியர்கள் இழுத்தனர் பொதுமக்கள் தடுப்பு வேலிகளுக்கு உள்ளே நின்று பார்க்க இதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது அதற்குள் நின்று கிராம மக்கள் தேர் வெள்ளோட்டத்தை பார்த்தனர்
மேலும் தேர் வெள்ளோட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னிலையிலும் சிவகங்கை மாவட்ட எஸ்பி அரவிந்த் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் இன்று அமைதியான முறையில் நடைபெற்றது