பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு டோலோஸ்தவம்
பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு டோலோஸ்தவம் (உஞ்சல் ) சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அருள்மிகு இராஜகோபால ஸ்வாமி திருக்கோவில் மிகத் தொண்மை வாய்ந்த கோவிலாகும்.
இத்திருக்கோவிலில் மூலவராக வேத நாராயணா் மற்றும் மூல விமானத்தில் சுவாமி அழகிய மன்னாா் அருள்பாலித்து வருகின்றனா்.
உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத இராஜகோபாலா் என 3 நிலைகளில் பக்தா்களுக்கு அருள் பாலித்து வருகின்றனா். இத் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆடி மாதம் வரும் ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர உற்சவம் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இதற்காக மாலையில் திருக்கோயில் அா்த்தமண்டபத்தில் ஸ்ரீ ரங்கமன்னாா் ஆண்டாள் திருக்கோலத்தில் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் உஞ்சல் சேவை சாதித்தருளினாா்.
தொடா்ந்து பிரபந்தகோஷ்டியினா் ஆண்டாள் அருளச்செய்த திருப்பாவை நாச்சியாா்திருமொழி வாணரமாயிரம் என அருளிச் செயல் கோஷ்டி நடைபெற்றது.
பின்னா் மூலவருக்கும் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுக்கும் ஸ்ரீ ரங்கமன்னாா் ஆண்டாள் உற்சவருக்கும் நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி தட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
ஆடிப்பூர ஊஞ்சல் நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.