in

புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்த மாணவ மாணவிகள் – பத்மஸ்ரீமுனுசாமி கைவினை கலைஞர் பேட்டி


Watch – YouTube Click

புதுச்சேரிக்கு பெங்களூரில் இருந்து கல்வி சுற்றுலா வந்த மாணவ மாணவிகள் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் சுடு களிமண் கொண்டு சிற்பங்கள் செய்தும் பார்த்தும் ரசித்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் மூன்று நாள் கல்வி சுற்றுலாவாக புதுச்சேரிக்கு வந்திருந்தனர்.

அவர்கள் புதுச்சேரியில் முக்கிய இடங்களான மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அறிவியல் மியூசியம்,மீன்கள் அருங்காட்சியகம் மற்றும் கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

இதனைத் தொடர்ந்து முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்திற்கு சென்ற அவர்கள் சுடு களிமண் கொண்டு சிற்பம் செய்வதை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

இதைத்தொடர்ந்து சுற்றுலா வந்த மாணவ மாணவிகள் களிமண்ணால் விநாயகர் குதிரை யானை ரோஸ் பானை உள்ளிட்ட விதவிதமான தங்களுக்குப் பிடித்த பொம்மை செய்து மகிழ்ந்தனர்

மேலும் சுடு களிமண் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி சுற்றுலா வந்த மாணவ மாணவிகளுக்கு சுடு களிமண் கொண்டு யானை, குதிரை, விநாயகர், உள்ளிட்ட 21 வகையான சிற்பங்கள் செய்வது குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.

மேலும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பொம்மைகள் செய்வது பனை ஓலையில் பொருட்கள் செய்வது குறித்த செய்முறை விளக்கத்தையும் பத்மஸ்ரீ முனுசாமி செய்து காட்டினார்.

இதனைத்தொடர்ந்து கைவினை கிராமத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் சுற்றுலா வந்த மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து மாணவ மாணவிகள் கூறும் பொழுது.

சுடுகளிமண்களை தங்கள் பார்த்ததே இல்லை என்றும் இதனை கொண்டு எவ்வாறு கைவினைப் பொருட்கள் உருவாக்கப்படுகிறது என்பதனை செய்து காட்டினார்கள் அதை மிக ஆர்வமுடன் கண்டு ரசித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுடு களிமண் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி கூறும்போது…

அழிந்து வரும் சூடு களிமண் மற்றும் கைவினைப் பொருட்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவ மாணவிகள் கைவினைப் பொருட்களை பார்வையிடுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது மாணவர்களுக்கு மாணவ மாணவிகளுக்கு சுடு களிமண் கொண்டு 21 வகையான சிற்பங்கள் எவ்வாறு செய்வது என்பதனை செய்து காட்டியதாகவும்,பொம்மலாட்டம் பனை ஓலைகள் பொருட்கள் செய்வது அடுத்த தலைமுறைக்கு இதை கொண்டும் செல்ல வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்ததாக தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு

விஜய பிரபாகரன் முரசு சின்னத்தில் போட்டி தேமுதிக செயல் வீரர் கூட்டத்தில் தீர்மானம்