புதுச்சேரியில் மலர் கண்காட்சி அமைச்சர் ஆய்வு
புதுச்சேரியில் மலர் கண்காட்சி 9ம் தேதி துவக்கம் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆய்வு
புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண் விழா எனும் 34வது மலர், காய், கனி கண்காட்சி வரும் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. தாவரவியல் பூங்காவில் மிக விழா நடக்கிறது. இப்பணியினை வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
விழாவில் வேளாண்மை, தோட்டக்கலை, அதனை சார்ந்தை நிறுவனங்கள், தங்களின் புதிய கண்டுபிடிப்புகள், விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு முறைகள், எந்திரங்கள், புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்களை அரங்குகளாக அமைத்து காட்சிப்படுத்துகிறது.
இதில் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தோட்டக்கலை ஆர்வலர்களின் படைப்புகளும், செயல்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. வேளாண் விழாவின் ஒரு பகுதியாக கொய்மலர்கள், தொட்டி வளர்ப்பு, மலர் அலங்காரம், காய்கறிகள், பழ வகைகள், தென்னை, மூலிகை செடிகள், பழ தோட்டங்கள், காய்கறி சாகுபடி வயல்கள், அலங்கார தோட்டம், மாடி தோட்டம், வீட்டு காய்கறி தோட்டம், ரங்கோலி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்தார்..
பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் ரங்கோலி, வினாடிவினா, கட்டுரைப்போட்டியும் நடத்தப்படும். விவசாய கருத்தரங்குகள், உயர் ரக நடவுக்கன்றுகளும் விற்பனை செய்யப்படும். மேலும் தனியார் நிறுவனங்களின் விற்பனை நிலையங்கள், உணவகங்களும் அமைக்கப்படும். இதை பொதுமக்கள் பங்கேற்று பார்வையிட்டு பயன்பெறலாம் என அமைச்சர் தேனீஜெயக்குமார் தெரிவித்தார்.