in

ப்ரோ கபடி தொடர் புனேரி பல்தான் சாதனை


Watch – YouTube Click

ப்ரோ கபடி தொடர் புனேரி பல்தான் சாதனை

இந்தியன் பிரிமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் போல ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ப்ரோ கபடி தொடர் (Pro Kabaddi League ) நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 2 தேதி 10வது சீசன் புரோ கபடி லீக் அகமதாபாத்தில் தொடங்கியது. இதில் தமிழகம், புனே, ஜெய்ப்பூர், குஜராத், ஹரியானா என 12 அணிகள் பங்கேற்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதி டாப் முதல் இரண்டு இடங்களில் பிடிக்கும் அணிகள் ஒன்றுக்கொன்று மோதி நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும். மூன்றாம் இடம் நான்காம் இடம் பிடித்த அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடி பின்னர் இறுதி சுற்றுக்கான தகுதி சுற்றி விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த புனேரி பல்தான் அணி, மூன்று முறை சாம்பியன் பட்டம் என்ற பாட்னா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல, ஹரியானா அணி குஜராத், ஜெய்பூர் என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியானது நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் புனே அணி 13 புள்ளிகளும் ஹரியானா 10 புள்ளிகளும் பெற்று இருந்தன. இரண்டாம் பாதியில் ஹரியானா அணியை ஆல் அவுட் செய்து வேகமாக கோப்பையை நோக்கி முன்னேறியது புனே அணி.

இறுதியாக 7 புள்ளிகள் வித்தியாசம் இருந்த நிலையில் கடைசி மூன்று நிமிடங்களில் 28-25 என மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணியை வீழ்த்தி ப்ரோ கபடி லீக்கில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது புனேரி பல்தான் அணி.

முதலிடம் பிடித்த புனே அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசு தொகையும், இரண்டாவது இடம் பிடித்த ஹரியானாவுக்கு 1.8 கோடி ரூபாய் பரிசு தொகையும் கிடைத்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணிதொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

பணமோசடி செய்ததற்காக Paytm வங்கிக்கு ரூ 5 49 கோடி அபராதம்