மக்களவை தேர்தல் வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்துவது குறித்து ஆலோசனை
முதலமைச்சர் ரங்கசாமியுடன் பாஜகவின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா சந்திப்பு…மக்களவை தேர்தல் வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்துவது குறித்து ஆலோசனை
புதுச்சேரியில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. இதில் ஆளும் என்.ஆர்.-பாஜக காங்கிரஸ் கூட்டணியில் பாஜக வேட்பாளர் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமைய அணுகி உள்ளார்.அதே நேரத்தில் இரு மத்திய அமைச்சர்களும் புதுச்சேரியில் போட்டியிட விரும்புகின்றனர்.
இருப்பினும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கட்சியின் மேல் இட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா இன்று மதியம் ரெண்டு 45 மணிக்கு முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்தார். 15 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பில், மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டது.முதலமைச்சர் ரங்கசாமி இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது பாஜக மாநிலத் தலைவர் செல்வ கணபதி எம்பி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்..
அப்போது புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை நிறுத்துவதாக பாஜக முடிவு செய்து இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.இதனை முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்றார். இருப்பினும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில மாநில அரசியலை விட்டு செல்ல தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால் வேறு வேட்பாளரின் நிறுத்தலாமா என்பது குறித்து கேட்டபோது முதலமைச்சர் ரங்கசாமி, நமச்சிவாயம் நிற்கவில்லை என்றால் தனது என் ஆர் காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அந்த வேட்பாளர் பெயரை சுரானாவிடம் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அவரை பாஜக வேட்பாளராகவோ அல்லது என் ஆர் காங்கிரஸ் வேட்பாளராகவோ நிறுத்தலாம் அவர் ஆலோசனை கூறியதாக தெரிகிறது