in

மத்திய ஆயுத காவல் படைகளுக்கான CAPF தேர்வு தமிழில் எழுதலாம்


Watch – YouTube Click

மத்திய ஆயுத காவல் படைகளுக்கான CAPF தேர்வு தமிழில் எழுதலாம்

மத்திய ஆயுத காவல் படைகளுக்கான (சிஏபிஎஃப்) காவலர் தேர்வு ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமின்றி முதன் முறையாக தமிழ் உள்பட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் 128 நகரங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மத்திய ஆயுத காவல் படைகளில் உள்ளூர் இளைஞர்கள் பங்கேற்பதை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் அடிப்படையில், மாநில மொழிகளிலும் காவலர் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி, அஸ்ஸôமீஸ், பெங்காலி, மராத்தி, குஜராத்தி ஆகிய மாநில மொழிகளிலும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தங்களின் தாய்மொழியில் தேர்வு எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) இந்தத் தேர்வை நடத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஆ ராசா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தேர்தலில் திமுகவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

வாழ்த்தியவர்களுக்கு நன்றி பிரிட்டன் மன்னர் சார்லஸ்