in

விபசித்து முனிவருக்கு விருத்தகிரிஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக திருவிழா


Watch – YouTube Click

விருத்தாசலம் கோவிலில் மாசிமகம் ஆறாம் நாள் திருவிழா விபசித்து முனிவருக்கு விருத்தகிரிஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பழமலைநாதர் என அழைக்கபடும் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில மாசிமகம் திருவிழா நடைபெற்று வருகிறது

பிப்ரவரி 20 ஆம் தேதி ஆறாம் நாள் திருவிழாவை முன்னிட்டு விருத்தாகிரிஸ்வரர் கோயில் உட்பிரகாரத்திலுள்ள மூலவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபஆராதனை நடைபெற்றது

பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் விநாயகர், வள்ளி தெய்வானை முருகன், விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், சண்டீகஸ்வரர் ஆகியோர் சிறப்பு ஆராதனையுடன் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து கோயிலின் முன்பகுதியான கிழக்கு கோபுரவாயிலில் அருள்மிகு பழமலை நாதர் உடனுறை விருத்தாம்பிகை, பாலாம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு காட்சியளித்தார்

இந்த ஐதீக நிகழ்ச்சியில் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது


Watch – YouTube Click

What do you think?

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற அன்னையின் 146-வது பிறந்த நாள் விழா